பாஜக உறுப்பினர்கள் அச்சப்பட வேண்டாம் - ராகுல் காந்தி

by Staff / 09-08-2023 12:54:25pm
பாஜக உறுப்பினர்கள் அச்சப்பட வேண்டாம் - ராகுல் காந்தி

மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் மக்களவையில் நேற்று தொடங்கியது. இந்நிலையில், மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான 2வது நாள் விவாதம் இன்று நடைபெறுகிறது. நேற்று முதல் நாள் விவாதம் 6 மணி நேரமாக அனல் பறக்க நடைபெற்றது. அதன்படி, மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் இன்று நண்பகல் 12 மணியளவில் தொடங்கியது. மக்களவையில் பேசிய ராகுல் காந்தி எம்.பி, “மணிப்பூர் பற்றியே பேசுவேன். மோடி - அதானி உறவு குறித்து நான் பேசப் போவதில்லை. பாஜக உறுப்பினர்கள் அச்சப்பட வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via