நடிகர் விஜய்க்கு  இயற்கையாகவே மக்கள் கூடுகின்றனர்- துரைவைகோ எம்பி.

by Staff / 30-09-2025 10:37:35am
நடிகர் விஜய்க்கு  இயற்கையாகவே மக்கள் கூடுகின்றனர்- துரைவைகோ எம்பி.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புது ரோட்டில் மாநிலங்களவை உறுப்பினர் வைகோ பரிந்துரையில் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சி திட்டம் 2024 -25-ம் ஆண்டு நிதியின் கீழ் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் திட்ட மதிப்பீடு  150 வாட்ஸ் 30 எல்இடி விளக்குகள் சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மின் கம்பங்கள் அமைக்கும் பணி கடந்த மே 18-ம் தேதி தொடங்கியது. தற்போது பணிகள் நிறைவடைந்த நிலையில் அதன் புதிய எல்இடி விளக்குகள் திறப்பு விழா இன்று நடைபெற்றது கோவில்பட்டி நகர்மன்றத் தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார்.  இதில் சிறப்பு விருந்தினராக மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி.  கலந்து கொண்டு புதிய எல்இடி விளக்குகளை இயக்கி வைத்து பார்வையிட்டார்.
இதனை தொடர்ந்து மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்பி செய்தியாளர்களிடம் பேசுகையில் கரூரில் மிகத் துயரமான சம்பவம் நடந்துள்ளது. 40 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இதில் அனைவருடைய தவறும் உள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் நடந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறக்கூடாது. இதை நடத்துவது அரசியல் ஆன்மீக மற்றும் கேளிக்கை நிகழ்ச்சியாக இருந்தாலும் காவல்துறையின் அறிவுரைகளைக் கேட்டு நடத்த வேண்டும். இதில் மக்களுக்கு விழிப்புணர்வு இருந்தால் தான் இது போன்ற நிகழ்வுகள் முற்றிலுமாக தடுக்கப்படும். இது போன்ற பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்களின் ஒத்துழைப்பு வேண்டும். இப்பிரச்சினை தொடர்பாக  தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக் குழு அமைத்துள்ளது, சிலர் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்கின்றனர், நீதிமன்றமும் இதனை விசாரிக்க உள்ளது..


நீதிமன்ற விசாரணை, சிபிஐ விசாரணை அல்லது மாநில அரசு அமைத்த விசாரணை ஆணையம் மூலமாகவும் சில உண்மைகள் தெரிய வரலாம் . விசாரணை முடிந்த பிறகு அதில் புறப்படும் காரணங்களை வைத்து யார் என்று கூறலாம் அதற்கு முன்பாக அவங்களா இவங்களா என்று யாராலும் சொல்ல முடியாது. 


அரசியல் கட்சியில் கூட்டம் நடத்த ஏற்கனவே விதிமுறைகள் உள்ளது. அரசு புதிதாக விதிமுறை வகுத்தாலும் மகிழ்ச்சிதான். அரசு கொண்டுவரும் அனைத்து விதிமுறைகளுக்கும் எல்லோரும் கட்டுப்பட வேண்டும் . மக்கள் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். 

யாருமே போக்குவரத்து விதிமுறைகளை கூட நாம் கடைப்பிடிப்பதில்லை . கரூர் போன்ற துயரச் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டுமென்றால் அனைவரின் ஒத்துழைப்பும் வேண்டும்.அருணா ஜெகதீசன் அறிக்கை பின்னர் ஸ்டெர்லைட் விவகாரத்தைப் பொறுத்தவரை குற்றம் சாட்டப்பட்ட சில சில அதிகாரிகளுக்கு குறிப்பாக  காவல்துறை அதிகாரிகளுக்கு உயர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு அமைப்புகள் மதிமுக பொதுச்செயலாளர் வைக்க உட்பட கண்டனத்திற்குரியது என்று கூறியிருந்தனர். 

ஆனால் கரூர் விவகாரத்தை பொறுத்தவரை தமிழகமே பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தில் அதுபோன்று மறுபடியும் இருக்கக் கூடாது என்பதுதான் எல்லோருடைய விருப்பம். மேலும் இதில் உயர்நீதிமன்றம் தலையிட போகிறது. கரூர் விவகாரத்தைப் பொறுத்தவரை நியாயமான நடவடிக்கை கிடைக்கும் என்பதை நாம் எல்லோரும் நம்ப வேண்டும் 


அத்தியாவசிய பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டது வரவேற்கத்தக்கது தான். இதனை பல வருடங்களுக்கு முன்பே கொண்டு வந்திருக்க வேண்டும். ஜிஎஸ்டி வரி குறைப்பு படி பொருட்களின் விலை குறைய வேண்டும். அதனை மத்திய மாநில அரசுகள் கண்காணித்து வருகின்றன. 

எந்த அரசியல் கட்சியும் கரூரில் நடைபெற்ற விபத்து போன்று நடக்க விரும்ப மாட்டார்கள். அந்த அளவுக்கு மோசமாகவில்லை என்று நினைக்கிறேன். 

இவங்க செய்திருக்கலாம் அவங்க செய்திருக்கலாம் என்று பல்வேறு தரப்பட்ட செய்திகள் சமூக வலைதளங்களில் உலாவிக் கொண்டிருக்கிறது 


எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இந்த விவகாரத்தில் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்துள்ளார்.எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சிபிஐ விசாரணை வேண்டுமென்று கோரிக்கை வைக்கிறார்.
 தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் சகோதரர் விஜயையும் அதை வலியுறுத்தியுள்ளார்.நீதிமன்றத்தில் விசாரணை நடக்கும் போது பல்வேறுகள் உண்மைகள் தெரிய வரும்.


தற்போது இவர் சொன்னது சரியா அவர் சொன்னது சரியா என்று சொல்ல முடியாது.

 
திமுகவில் தொண்டர் படை உள்ளது என்றால் அதற்கு விதை விதைத்தது வைகோ தான். அதேபோல் மதிமுகவிலும் உள்ளது. விஜய் மிகப்பெரிய சினிமா நட்சத்திரம். இன்றைக்கு அவர் அரசியல் கட்சி தலைவர்.  அவருக்கு இயற்கையாகவே மக்கள் கூடுகின்றனர். ஒரு இடத்திற்கு அவர் சென்றார் சொல்லாமலே மக்கள் கூடுகின்றனர் . அப்படி கூட்டும் கூடும்போது அதை முறைப்படுத்த அவர்கள் கட்சியினர் இருக்க வேண்டும். காவல்துறையினால் அதை முழுமையாக செய்ய முடியாது. காவல்துறையை சொல்வதை தவெக தொண்டர்கள் கேட்கப் போவது கிடையாது. மற்ற கட்சிகளில் தொண்டர்களை கட்டுப்படுத்தி ஒருங்கிணைக்க அமைப்பு இருப்பது போல சகோதரர் விஜயும் ஒரு அமைப்பைக் கொண்டு வர வேண்டும்.  அது அவருடைய இயக்கத்திற்கும் நல்லது பொதுமக்களுக்கும் நல்லது அரசாங்கத்திற்கும் நல்லது  என்றார்

 

Tags : நடிகர் விஜய்க்கு  இயற்கையாகவே மக்கள் கூடுகின்றனர்- துரைவைகோ எம்பி.

Share via