ஈ.சி.ஆர் சம்பவம் - இளைஞர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.

by Editor / 29-01-2025 05:34:21pm
ஈ.சி.ஆர் சம்பவம் - இளைஞர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.

சென்னை கிழக்கு கடற்கரை (ஈ.சி.ஆர்.) சாலையில் பெண்கள் சென்ற காரை தி.மு.க. கொடி பொருத்திய சொகுசு காரில் துரத்திச் சென்று இளைஞர்கள் வழிமறித்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்துக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி, பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். 

பெண்களின் காரை இளைஞர்கள் துரத்திய சம்பவம்  தொடர்பாக 4 பிரிவுகளில் இளைஞர்கள் மீது கானத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் இளைஞர்களை வலை வீசி தேடி வருகிறார்கள். மேலும், வீடியோ அடிப்படையில் கார் எண்கள் கண்டறியப்பட்டு  இளைஞர்களை கைது செய்ய 2 தனிப்படை அமைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 

 

Tags : ஈ.சி.ஆர் சம்பவம் - இளைஞர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு

Share via

More stories