உலகின் மிகப்பெரிய விருதான 2022 ஆண்டுக்கான நோபல் பரிசு
உலகின் மிகப்பெரிய விருதான 2022 ஆண்டுக்கான நோபல் பரிசு பல்வேறு துறைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.இந்தாண்டு வேதியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு வழங்கப்படவுள்ளதாக தேர்வுக்குழு அறிவித்துள்ளது.ஆண்டுதோறும் அறிவிக்கப்படும் நோபல் பரிசு ,இந்தாண்டிற்கான மருத்துவத்துறையைச்சார்ந்த சுவிடன் நாட்டைசேர்ந்த ஸ்வான் டேபாபோவுக்கு மரபியல் சார் மனித இன அழிந்து போன மரபணு-மனிதபரிணாமம் தொடர்பான புதியகண்டுபிடிப்பிற்கும் குவாண்டம் தியரியின் அடிப்படையில் நுண்துகள்கள் பற்றிய ஆய்வுக்கு இயற்பியல் விஞ்ஞானிகளான அலைன் ஆக்ஸ்பெட்,ஜான் எப் கிளாசர்,ஆண்டன்ஜீலீங்கர் மூவருக்கும் வழங்கப்படவுள்ளது.இவர்கள் முறையேபிரான்ஸ்,அமெரிக்கா,ஆஸ்திரிரேலியாவை சேர்ந்தவர்கள்.வேதியல் துறைக்கு இரண்டு அமெரிக்கர்களுக்கும் ஒரு டென்மார்க்கருக்கும் சேர்ந்து பகிர்ந்தளிக்கப்படுகிறது.அவர் கரோலின் பெர்டோசி,பேரிஷார்ப்லெஸ்,மோர்டன் மெல்டல் ஆவர்.இதில் அமெரிக்காவை சார்ந்த பேரிஷார்ப்லெஸ் ஐந்து பேருடன் சேர்ந்து நோபல்பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2022 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரெஞ்சு எழுத்தாளர் அன்னி எர்னாக்ஸுக்கு வழங்கப்படுகிறது
Tags :