வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.
சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையானது 35 முதல் 75 சதவிகிதம் வரை அதிகமாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீட்பு பணிகளுக்காக மத்திய மீட்பு படையினர் 2,048 பேர் தயார் நிலையில் உள்ளனர். அனைத்து வகையிலும் தயார் நிலையில் இருக்கிறோம். 121 பல்நோக்கு மையங்கள் தயார் நிலையில் உள்ளது. தண்ணீர் தேங்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச மழையை விட அதிக மழை பெய்யும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
புயல் குறித்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை. தமிழ்நாடு சார்பில் 1,249 பேரும், மத்திய அரசு சார்பில் என 2,048 பேரும் தயார் நிலையில் உள்ளனர். ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்கள் தகவல் தெரிவிக்கும் தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநில கட்டுப்பாட்டு மையம் 1070 எண் உள்ளது. அதே போல் மாவட்ட அளவில் 1077 எண் கொடுக்கப்பட்டுள்ளது. 131 இடங்களில் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளது.
எல்லா மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் கட்டுப்பட்டு மையம் உள்ளது. தனியார் வானிலை ஆய்வாளர்கள் சொல்லும் தகவல்கள் கண்காணிக்கப்படும். யார் நல்லது சொன்னாலும் அதை கேட்பதில் தவறில்லை. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
Tags :