. சினிமா ஆரோக்கியமாக வளர வேண்டும் எனில் ,நிறைய தயாரிப்பு நிறுவனங்கள் வர வேண்டும்
தமிழ் திரை உலகில் தினமும் சின்ன பட்ஜெட் படங்களின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கின்றன.பிரம்மாண்ட படமும் இன்னொரு பக்கத்தில் நடந்து கொண்டிருந்தாலும் சின்ன படங்கள் அதிக அளவில் திரையரங்கிற்கு வராமலே தன்னுடைய ஆயுளை முடித்துக் கொண்டிருக்கின்றன .ஆனால், பிரம்மாண்டமான படங்கள் அதிக முதலீட்டில் எடுக்கப்படக்கூடிய படங்கள் எல்லாம் ஒரு நாளில்- இரண்டு நாளில் 100 கோடி 200 கோடி என்று வசூலை செய்து பட தயாரிப்பு நிறுவனத்தை மேலும் வளர்த்துக் கொண்டிருக்கின்றன. ஆனால்,திரை மீது உள்ள கனவாலும் நம்பிக்கையானும் எப்படியும் தாம் ஒரு படம் எடுத்து விட வேண்டும் என்று வந்திருக்கிற இளைஞர்கள் பல ஆண்டுகளாக போராடி ஒரு திரைப்படத்தை உருவாக்கி, அதை வெளியிட்டு ரசிகர்களிடம் கரை சேர்ப்பது என்பது குதிரைக்கொம்பாகத்தான் இருக்கிறது. பெரும் பணம் செலவிட்டு எடுக்கப்படும் படங்கள் வசூலில் வெற்றி கொடி நாட்டி விட்டாலும் தயாரிப்பாளர் என்னவோ மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக தெரியவில்லை. காரணம் போட்ட பணத்தை அவர்களால் எடுக்க முடிகிறதே தவிர, அதிக லாபத்தை அவர்களால் பெற முடியாமல் போவதற்கு அவர்களுடைய படத்தின் கதாநாயகர்களுக்கு நூறு கோடிக்கு மேல் சம்பளமாக கொடுக்கப்பட வேண்டிய நிலையும் இப்பொழுது இயக்குனருக்கு 30 கோடி 40 கோடி என்று சம்பளம் பேசக்கூடிய நிலை வந்திருக்கிறது.. கதாநாயகிக்கு வேறு ஐந்து கோடி 10 கோடி என்று கொடுப்பதன் காரணமாகவும் ஒரு சில பேருக்கு மட்டுமே, ,அதாவது கதாநாயகன் ,கதாநாயகி, இயக்குனருக்கு மட்டுமே படத்தின் பட்ஜெட்டில் 75 சதவீதம் கொடுக்கப்பட்டு விட்ட நிலையில் மீதியை வைத்து தான் படத்தை எடுக்கிறார்கள். அந்த பணம் முழுமையாக ஒரு தயாரிப்பாளர் கையில் இருந்து செலவழிக்கப்படுகிறதா... இல்லை, அவர்கள் விநியோகஸ்தர்களிடம் இருந்தும் வட்டிக்கு பணத்தை வாங்கி.... படத்தை எடுப்பதால்.. அதற்கான செலவினங்களை அதிகரித்து விடுகிற நிலையில்.... தயாரிப்பாளர் மிகச் சொற்ப லாபத்திலே தான் இந்த பிரம்மாண்ட படத்தில் கோடிக்கணக்கான வசூல் செய்யக்கூடிய, படத்தினுடைய லாபத்தை ஈட்டுகிற நிலையில் இருக்கிறார். சில நேரங்களில் சின்ன படங்கள் நல்ல கதை அம்சமோடு -ரசிகர்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக் கூடிய படங்கள், ஐந்து கோடியில் எடுக்கப்படுகிற படங்கள் 100 கோடிகளை லாபம் எடுத்துக் கொடுத்ததையும் 12 கோடியில் எடுக்கப்பட்ட படம் 500 கோடியை லாபகரமாக ஈட்டி கொடுத்ததையும் நாம் பார்க்கிறோம். அவர் திரை உலகில் நல்ல கதை இருந்தால் குறைந்த முதலீட்டில் சிறந்த படத்தை எடுக்க முடியும் அதை வெற்றிகரமாக லாபகரமானதாக ரசிகர்கள் மாற்றிக் கொடுக்கிறார்கள். திரைப்படத் துறையில் நல்ல கதையை நோக்கி போகாமல் கதாநாயகர்களையே நோக்கி போவதின் காரணமாகத்தான் திரை உலகம் ஒர் ஆரோக்கியமான போக்கோடு இன்னும் வளர்ச்சி அடையாமல் முட்டிக் கொண்டிருக்கின்றன .சுற்றி சுற்றி ஒரு ஐந்து கதாநாயகர்களை மட்டுமே வைத்து தமிழ் திரை உலகம் சுழன்று கொண்டிருக்கிறது. அவர்களும் அதை இறுக்கமாக பிடித்துக் கொண்டு திரை உலகத்தினுடைய ஆதிக்கத்தை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் .எத்தனையோ பிரபலமான திரை தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் இன்றைக்கு காணாமல் போய்விட்டன .அங்கொன்றும் இங்கொன்றுமாக சில தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமே தற்பொழுது உயிரோடு இருக்கின்றன .ஆனால் ,ஆக்டோபஸ் கரங்களாக இருந்து கொண்டு திரை உலகை தனக்குள்ளே விழுங்கி கொண்டிருக்கின்ற பெரும் முதலீட்டு நிறுவனங்கள் தமிழ் சினிமாவை பற்றி அக்கறை எடுக்காமல் பணம் சம்பாதிப்பதில் மட்டுமே குறியாக இருக்கின்றன. ஓ.டி. டி தளம் இன்றைக்கு புதிய இயக்குனர்களுக்கு நடிகர்களுக்கு தயாரிப்பாளர்களுக்கு கை கொடுக்கக் கூடியதாக இருக்கின்ற நிலையை நாம் பார்க்கின்றோம். இருப்பினும், ஒரு திரைப்படம் திரையரங்கில் ஓடி ரசிகர்களால் பாராட்டப்படுகின்ற பொழுதுதான் அந்தப் படத்தில் பங்கேற்று உள்ள கலைஞர்களின் கனவு நனவாகும். ஓ.டி.டி என்கிற இணையதளத்தின் வழியாக எத்தனை பேர் அந்த படத்தை பார்த்து ரசித்திருக்க முடியும் .ஆகவே, முன்பு போலவே எம்ஜிஆர் படம் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது சிவாஜி இருந்தார் ரவிச்சந்திரன் இருந்தார் ஜெய்சங்கர் இருந்தார் என்ற ஒரு பெரிய பட்டாளத்தையே சொல்லலாம் பல்வேறு திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களும் கொடிகட்டி பறந்தன .ஒரு பக்கம் இயக்குனர்கள் வளர்ந்து கொண்டு இருந்தார்கள் .அவர்களுடைய தனிப்பட்ட கதையை அமைப்பின் மூலமாக அழுத்தமான நடிப்பின் மூலமாக நடிகர்கள் பிரபலமாகி கொண்டிருந்தார்கள். தொழில் திரையு தொழில் ஓஹோ என்று வளர்ந்து கொண்டுதான் இருந்தது .ஆனால் இன்றைக்கு ஒரு சிலர் தங்களுடைய பழைய நிலையை மறந்து அன்றைக்கு திரையுலகத்திற்கு வரும் பொழுது அவர்களுக்கு எத்தனை பேர் ஆதரித்தார்கள், எப்படி எல்லாம் வளர்த்து விட்டார்கள் என்பதெல்லாம் மறந்துவிட்டு, இன்றைக்கு புதியவர்களை வளர விடாமல், வந்துவிடாமல் பார்த்துக் கொள்ளக்கூடிய நிலை தமிழ் திரை உலகில் இருந்து கொண்டிருக்கிறது .புதிதாக வந்து ஒருவன் ஜெயித்து நிற்பது என்பது, எந்த விதமான பின்புலமும் இல்லாதவர்கள் வந்து நிற்பது என்பது, திரை உலகத்தில் சாதாரணமான விஷயமாக இல்லை. சினிமா ஆரோக்கியமாக வளர வேண்டும் எனில் ,நிறைய தயாரிப்பு நிறுவனங்கள் வர வேண்டும். நிறைய திறமைசாலிகளுக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும். அப்பொழுதுதான் ஆரோக்கியமான தமிழ் சினிமா மீண்டும் உயிர்த்தெழும்.....
Tags :