கொள்ளை நோய்தொற்றில் கொள்ளை இலாபம் பார்க்கும் தரமற்ற முககவச விற்பனையாளர்கள்

by Editor / 03-01-2022 10:21:10pm
கொள்ளை நோய்தொற்றில் கொள்ளை இலாபம் பார்க்கும் தரமற்ற முககவச விற்பனையாளர்கள்

தமிழகத்தில் தற்போது  கொரானா தொற்று  அதிகரித்து வருகிறது. இதை தடுக்க அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதனைமுன்னிட்டு அரசின் உத்தரவு பின்பற்றி ஏராளமான பொதுமக்கள் முகவசங்களை அணிந்து  வருகின்றனர்.தரமான முகக்கவசங்கள் ஏராளமான மருந்து விற்பனையகங்களில் ,பெரிய பேன்ஸிகடைகளிலும் விற்பனையாகின்றன

இந்த நிலையில் இதை  சில வியாபாரிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு  தரமற்ற  முகக்கவசங்களை வாங்கி அதனை சாலைகளிலுள்ள சின்ன சின்ன கடைகளுக்கு விநியோகம் செய்து வருகின்றனர்.மேலும் மக்களும் அவசரத்தேவைக்காக முகவசங்களை வாங்கி சென்றுவிடுகின்றனர்.தரமற்ற முகக்கவசங்கள் நாடுமுழுவதும் மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.பெரும்பாலும் பேருந்து நிலையங்களில் உள்ள கடைகளில் மனசாட்சியில்லாமல் இந்த கொள்ளைகள் அரங்கேறிவருகின்றன.

இதனால் கொரோனா தொற்று பரவ வாய்ப்பு அதிகம் உள்ளது. உதாரணத்திற்கு  N95 மாஸ்க் பல இடங்களில் போலியாக விற்பனைசெய்யப்படுகிறது.அது போன்று  1ரூபாய் மதிப்புள்ள தரமற்ற முகக்கவசங்கள் ரூ5க்கு விற்பனை செய்யப்படுகிறது.

எனவே தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறை திறடி நடவடிக்கைகளை மேற்கொண்டு சோதனைகளை  நடத்தி தரமற்ற முககவசம் விற்பனை செய்வதை  தடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் பொதுமக்களை கொரோனா பிடியில் மட்டும் இன்றி இது போல் தரமற்ற மாஸ்க் விற்பனையாளர்களிடமிருந்தும்  காப்பாற்ற வேண்டும் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பு.
 

 

Tags :

Share via