வான வேடிக்கையை பார்க்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

by Editor / 11-12-2024 11:37:24pm
வான வேடிக்கையை பார்க்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் திருக்கார்த்திகை தீப திருவிழா கடந்த நான்காம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலகாலமாக நடைபெற்று வருகிறது. 

பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் அனுதினமும் காலை மற்றும் இரவு வேலைகளில் பஞ்ச மூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருவது வழக்கம். 

இந்நிலையில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா எட்டாம் நாள் திருவிழா இரவு உற்சவத்தில் பல வருடங்களாக பிச்சாண்டவர் உற்சவம் திருவண்ணாமலை நகரம் முழுவதும் சென்று காந்தி சிலை அருகே எழுந்தருள்வார். அப்பொழுது அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை வான வேடிக்கை நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு பிச்சாண்டவர் உற்சவத்தின் போது வான வேடிக்கை நடைபெறாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. வான வேடிக்கையை பார்க்க வந்த குழந்தைகள், பெரியோர்கள் என அனைவரும் ஏமாற்றம் அடைந்து திரும்பி செல்கின்றனர். 

 

Tags : வான வேடிக்கையை பார்க்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Share via