"அதிமுக கூட்டணிக்கு விஜய் வரவேண்டும்" - முன்னாள் அமைச்சர் அழைப்பு

by Editor / 23-06-2025 02:11:40pm

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி சிவகாசியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மதுரை மாநாட்டில் அண்ணாவை விமர்சிக்கும் வீடியோவை ஒளிபரப்பியது வருத்தமளிக்கிறது. மறைந்த தலைவர்களை விமர்சிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டதை தவிர்த்திருக்கலாம். திமுக ஆட்சியை அகற்ற அதிமுக கூட்டணிக்கு விஜய் வரவேண்டும்” என்றார். ஏற்கனவே, கூட்டணிக்கு விஜய் வந்தால், அவருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்குவதற்கு இபிஎஸ் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது.
 

 

Tags :

Share via