முதியோர்களுக்கு பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு

by Staff / 01-02-2023 05:11:21pm
முதியோர்களுக்கு பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு

நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த வரிசையில் மூத்த குடிமக்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. தற்போது வெளியான அறிவிப்பில் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் அதிகபட்ச வரம்பு ரூ.30 லட்சமாக உயர்த்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதனால் மூத்த குடிமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முன்னதாக இந்த வரம்பு ரூ.15 லட்சம் வரை மட்டுமே இருந்தது.

 

Tags :

Share via