சார்ஜ் போட்ட இ-பைக் திடீரென தீப்பிடித்து எரிந்தது-3 பேர் காயம்

by Editor / 16-03-2025 11:28:28am
 சார்ஜ் போட்ட இ-பைக் திடீரென தீப்பிடித்து எரிந்தது-3 பேர் காயம்

சென்னையில் இ-பைக் தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் காயம் அடைந்தனர். மதுரவாயலில் வீட்டில் சார்ஜ் போட்ட போது இ-பைக் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 9 மாத குழந்தை உட்பட 3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வாகனம் முற்றிலும் எரிந்து நாசமான நிலையில், அங்கிருந்த பொருட்களுக்கும் தீ பரவி எரிந்தது. இது குறித்து தகவலறிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : இ-பைக் தீப்பிடித்து 3 பேர் காயம்

Share via