பெரு நாட்டின் இடைக்கால அதிபர் ஜோஸ் ஜெர்ரி நாடாளுமன்றத்தால் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

by Admin / 18-02-2026 09:13:11am
பெரு நாட்டின் இடைக்கால அதிபர் ஜோஸ் ஜெர்ரி நாடாளுமன்றத்தால் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பெரு நாட்டின் இடைக்கால அதிபர் ஜோஸ் ஜெர்ரி நாடாளுமன்றத்தால் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சீன தொழில் அதிபர்களுடன் அவர் நடத்திய ரகசிய சந்திப்புகள் தொடர்பாக சிஃபாகேட் ஊழல் புகார்களை தொடர்ந்து அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . அரசுக்கு தெரிவிக்காமல் ,சீன தொழிலதிபர்களை ரகசியமாக சந்தித்தது மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அவருக்கு எதிராக 75 வாக்குகளும் ஆதரவாக 24 வார்த்தைகளும் கிடைத்தன .இதற்கு முன் ஜனாதிபதியாக இருந்த டினா போலுவார்டே அக்டோபர் மாதம் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு இடைக்கால அதிபராக பொறுப்பேற்ற ஜோஸ் ஜெர்ரி நான்கு மாதங்கள்மட்டுமே பதவி இருந்துள்ளார்.பெருவில் வரும் ஏப்ரல் மாதம் பொது தேர்தல் நடைபெற உள்ளது .புதிய அதிபராய் தேர்ந்தெடுக்கும் வரை நாடாளுமன்றம் ஒரு புதிய இடைக்கால தலைவரை தேர்ந்தெடுக்கும் .

 

Tags :

Share via

More stories

Logo