அமெரிக்கா ஈரான் இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தை ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.
அமெரிக்கா ஈரான் இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தை ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் ஓமன் நாட்டின் தூதுகரத்தில் நடைபெற்ற இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் வழிகாட்டும் கொள்கைகள் குறித்த ஒருமித்த கருத்தை எட்டியுள்ளன. ஈரானிய வெளிவரவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி பேச்சுவார்த்தையில் ஒரு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு நல்ல ஒப்பந்தத்திற்கான பாதை தென்படத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிகாரிகளும் இதை ஒரு முன்னேற்றம் என்று உறுதிப்படுத்தி உள்ளனர். இன்னும் இரண்டு வாரங்களில் ஈரான் விரிவான முன்மொழிவுகளை சமர்ப்பிக்க ஒப்புக்கொண்டுள்ளது. இரு தரப்பும் ஒப்பந்தத்திற்கான வரைவு முறைகளை தயார் செய்ய உள்ளன. யுரேனியம் செறிவூட்டலை 3 முதல் ஐந்து ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க ஈரான் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல். தங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம் மற்றும் வங்கி தடை, எண்ணெய்விற்பனை தடையை நீக்க வேண்டும் என்று ஈரான் கோரிக்கை வைத்துள்ளது. இருதரப்பும் பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்தாலும் மத்திய கிழக்கில் அமெரிக்க தனது ராணுவ பலத்தை அதிகரித்து வருகின்றது .மேலும் ஈரானின் ஏவுகணை திட்டம் பிராந்திய குழுக்களுக்கான ஆதரவு போன்ற கூடுதல் அம்சங்களையும் இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. இது ஒரு சிக்கலை உருவாக்கலாம் என்றும் கருத்து.
Tags :

















