அடர்ந்த வனப்பகுதியில் உள்ள செண்பகாதேவி அம்மன் ஆலயத்தில் தீர்த்த வாரி நடைபெற்றது.

by Editor / 06-05-2023 09:39:44pm
அடர்ந்த வனப்பகுதியில் உள்ள செண்பகாதேவி அம்மன் ஆலயத்தில் தீர்த்த வாரி நடைபெற்றது.

தென் பொதிகை மலை எனப் போற்றப்படும் குற்றாலம் பொதிகை மலையில் அகஸ்தியர் அமர்ந்து பூஜை செய்த பொதிகை மலையில் அடர்ந்த வனப் பகுதியில் தரை மட்டத்திலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் வனப்பகுதியில் அமைந்துள்ளது குற்றாலம் செண்பகாதேவி அம்மன் ஆலயம் இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி தினத்தன்று இங்கு நடைபெறும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம் இந்த ஆண்டுக்கான சித்ரா பௌர்ணமி திருவிழா கடந்த 26 ஆம் தேதி காலை அம்மனுக்கு காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது விழாவில் தினமும் ஒவ்வொரு சமுதாய மண்டகப்படி சார்பில் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது 5ஆம் தேதி சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு காலையில் கணபதி ஹோமம் ,உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள், சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள், மதியம் உச்சிகால பூஜை தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபட்டனர்.மேலும் பெண்கள் ஔவையார் அம்மனுக்கு கொழுக்கட்டை படைத்தும் வழிபட்டனர். இரவில் சிறப்பு அலங்கார தீபாராதனை நள்ளிரவில் சித்ரா பௌர்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக இன்று 12 மணிக்கு பூஜை முடிந்து செண்பகாதேவி அம்மனுக்கு செண்பகாதேவி அருவியில்வைத்து தீர்த்த வாரி நடைபெற்றது. முன்னதாக மண்டகப் படிதாரர்கள் அவ்வையார் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து செண்பகாதேவி அம்மனை செண்பகாதேவி அருவியில் மஞ்சள் நீரில் நீராட்டு நடைபெற்றது. தீர்த்தவாரி நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் மண்டக படிதார்கள் கலந்து கொண்டனர்.குற்றாலம் வனத்துறையினர் சார்பில் முதன்முறையாக செண்பகாதேவி அம்மன் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்களிடம் ஆதார் சான்றுகளை பெற்று முழுமையான பாதுகாப்பு வழங்கியது பக்தர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. பாதுகாப்பு பணியில் ஏராளமான வனத்துறை அலுவலர்கள் தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து பங்கேற்றனர்.

 

Tags :

Share via