திருவிழா கூட்டத்தை பயன்படுத்தி  6 பேரிடம் 22 சவரன் நகை பறிப்பு- காவல்துறை விசாரணை

by Editor / 06-05-2023 08:11:47pm
திருவிழா கூட்டத்தை பயன்படுத்தி  6 பேரிடம் 22 சவரன் நகை பறிப்பு- காவல்துறை விசாரணை

சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி மே 5 ம் தேதி நடைபெற்றது. இந்த திருவிழாவிற்கு மதுரை மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளால் இருந்து 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். சித்திரை விழாவிற்காக 10 எஸ்பிக்கள் தலைமையில் 5000 காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். இருப்பினும் மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவிற்கு வருகை தந்த முதாட்டிகளை குறி வைத்து வழிப்பறி கும்பல் ஒன்று மதிச்சியம், ஆழ்வார்புரம் மற்றும் வைகை வடகரை பகுதிகளில் 5 மூதாட்டிகள் மற்றும் ஒரு இளைஞர் என 6பேரிடம் 22பவுன் தங்க நகைகளை வழிப்பறி செய்துள்ளனர்.- இதுகுறித்து மதிச்சியம் காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி அழகரை காண வந்த பக்தர்களிடம் நகைகள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo