விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு:தொண்டர்கள் மிகிழ்ச்சி.

by Editor / 16-06-2024 11:42:41pm
விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு:தொண்டர்கள் மிகிழ்ச்சி.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கோவையில் விரைவில் நடைபெற உள்ளதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மாநாடு நடத்துவதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இதற்காக 36 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இடம் தேர்வு தொடர்பான பணிகள் முடிந்த பின்னர் த.வெ.க. தலைவர் விஜய்யின் கவனத்திற்கு அதை கொண்டு சென்று விரைவில் அறிவிப்பை வெளியிடுவோம்" என்று தெரிவித்தார்.இந்த தகவலால் த.வெ.க.தொண்டர்கள் மிகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

Tags : விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு:தொண்டர்கள் மிகிழ்ச்சி.

Share via