அதிமுக தொண்டர்களை எடப்பாடி பழனிசாமி ஏமாற்றுகிறார் - உதயநிதி ஸ்டாலின்

by Admin / 10-11-2025 09:06:23am
அதிமுக தொண்டர்களை எடப்பாடி பழனிசாமி ஏமாற்றுகிறார் - உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இடையே ஆம்னி பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படாது என்று உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. வரி விதிப்பு உள்ளிட்ட சில காரணங்களுக்காக இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது
.
திருச்சி மாவட்டத்தில் சுமார் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 25 'அன்புச்சோலை' முதியோர் மனமகிழ் மையங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

 தமிழ்நாட்டில் இன்று இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள உண்மையான வாக்காளர்களின் பெயர்களைப் பட்டியலில் இருந்து நீக்க, தேர்தல் ஆணையம் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு (எஸ்.ஐ.ஆர்.) மூலம் திட்டமிட்டுள்ளது-.எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு. 

விஷால் தலைவராக இருந்தபோது ரூ.8 கோடி விதிகளை மீறி செலவானதாகக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு, அதுகுறித்து விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதிமுக தொண்டர்களை எடப்பாடி பழனிசாமி ஏமாற்றுகிறார் என்று உதயநிதி ஸ்டாலின் நேரடித் தாக்கு.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். 

 

Tags :

Share via