இந்த ஆண்டு மொத்தமாக 13 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது- இஸ்ரோ தலைவர் நாராயணன் .

by Editor / 19-05-2025 10:18:56am
இந்த ஆண்டு மொத்தமாக 13 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது- இஸ்ரோ தலைவர் நாராயணன் .

இஸ்ரோ தலைவர் நாராயணன் சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார். அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“101வது ராக்கெட்டை  விண்ணில் ஏவினோம். பிஎஸ்எல்வி ராக்கெட் நான்கு கட்டங்களாக செலுத்தப்பட்டது. நான்கு கட்டங்களும் சரியாக வேலை செய்தால்தான் செயற்கைக்கோளை வெற்றிகரமாக மேலே செலுத்த முடியும். அன்று காலை திட்டமிட்டபடி 5. 59 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட்டில் முதல் இரண்டு கட்டங்களும் வெற்றிகரமாக செயல்பட்டது.

மூன்றாவது கட்டம் சிறிதாக கோளாறு கொடுத்தது. எப்படி இருந்தாலும் நான்காவது கட்டம் சிறப்பாக வேலை செய்தது. இருப்பினும் மூன்றாவது கட்டம் கோளாறு கொடுத்ததால் இந்த ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணிற்கு செலுத்த முடியவில்லை. ராக்கெட்டின் தோல்வி குறித்து கண்டறிய குழு அமைத்துள்ளோம்.

ராக்கெட் சோதனை தோல்வி அடைந்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்த வருடம் மொத்தமாக 13 ராக்கெட் விண்ணில் அனுப்ப இருக்கிறோம். இந்த ராக்கெட் தோல்வி அடைந்தாலும் அடுத்தடுத்தது நினைத்தது போல ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராக்கெட் விண்ணிற்கு ஏவப்பட உள்ளது. மக்கள் சந்தோஷமாகவும் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்பதற்கான எல்லா விதமான பணிகளையும் இந்திய விண்வெளித் துறை செய்து வருகிறது.என தெரிவித்தார்.

 

Tags : இந்த ஆண்டு மொத்தமாக 13 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது என இஸ்ரோ தலைவர் நாராயணன் 

Share via