வழிப்பறியில் ஈடுபட்ட  நபர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு

by Editor / 28-05-2024 10:27:47pm
வழிப்பறியில் ஈடுபட்ட  நபர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் வழிப்பறி செய்தும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த  சங்கரன்கோவில் ராமசாமியாபுரம் 2வது தெருவை சேர்ந்த சுடலையாண்டி என்பவரின் மகன் சுரேஷ்(27) என்பவரை  பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P.சுரேஷ்குமார் B.E., M.B.A., அவர்கள் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில் மேற்படி நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

 

Tags : வழிப்பறியில் ஈடுபட்ட  நபர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு

Share via
Logo