விரும்புபவர்கள் பதவி விலகிக்கொள்ளலாம்.. மு.க.ஸ்டாலின்
அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சியில் மிகப்பெரிய அமைப்பு ரீதியான மாற்றங்களைக் கொண்டு வரப்போவதாகத் தெரிவித்துள்ளார். "செயல்பட முடியாதவர்கள் தாமாகவே முன்வந்து விலகிக்கொள்ளலாம்" எனத் திட்டவட்டமாகக் கூறிய அவர், ஒற்றுமை இல்லாவிட்டால் வெற்றி சாத்தியமில்லை என்றும், கோஷ்டி அரசியலைக் கைவிடுமாறும் நிர்வாகிகளை வலியுறுத்தினார். மேலும், கள ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்கத் தனிக்குழு அமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
Tags :



















