பத்து வயது சிறுமி பலாத்காரம்.. இளைஞர் கைது
சென்னை புழல் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று சிறுமி அருகில் இருக்கும் பெட்டிக்கடைக்கு சென்று தின்பண்டம் வாங்கிக்கொண்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் (21) என்பவர் சிறுமியின் கைகளைப் பிடித்து இழுத்து அருகில் உள்ள ஆளில்லாத வீட்டின் மொட்டை மாடிக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது அவரை தள்ளிவிட்ட சிறுமி, அங்கிருந்து சென்று பெற்றோர்களிடம் இது குறித்து கூறியுள்ளார். இதனையடுத்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் போக்ஸோ சட்டத்தில் போலீசார் ரமேஷை கைது செய்தனர்.
Tags :