இலங்கை அதிகாரி கொலையில் 6 பேருக்கு மரண தண்டனை வழங்கி அந்நாட்டு பயங்கரவாத தடுப்பு கோர்ட்டு தீர்ப்பு
இலங்கையை சேர்ந்த பிரியந்த குமாரா (வயது 48) என்பவர் பாகிஸ்தானின் சியால்கோட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்தார்.
இவர் மத நிந்தனை செய்ததாக கடந்த ஆண்டு ஒரு கும்பலால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமின்றி, இலங்கையுடனான உறவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. இதில் 89 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது.
இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் 6 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். மேலும் 7 பேருக்கு ஆயுள் தண்டனையும், 76 பேருக்கு 2 ஆண்டு சிறையும் விதிக்கப்பட்டது.
Tags :