அமெரிக்காவும் ஐரோப்பாவும் உறவை மீண்டும் வலுப்படுத்த வேண்டும்- அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ

by Admin / 16-02-2026 12:26:05am
 அமெரிக்காவும் ஐரோப்பாவும் உறவை மீண்டும் வலுப்படுத்த வேண்டும்- அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ

ஜெர்மனி முனிச் நகரில் நடைபெற்ற 62 ஆவது உச்சி மாநாட்டில் 50க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அமெரிக்காவும் ஐரோப்பாவும் ஒன்றாக சேர்ந்தவை என்று கூறி இரு தரப்பு உறவை மீண்டும் வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார். கடந்த காலங்களில் நிலவிய கசப்பான சூழல்களைக் கடந்து அமெரிக்கா -ஐரோப்பா இடையிலான பழைய நட்பை மீண்டும் புதுப்பிக்க விரும்புவதாக ரூபியோ தெரிவித்தார் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் கலாச்சாரம் மற்றும் வரலாற்று பிணைப்புகளை அவர் சுட்டிக் காட்டியதோடு அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட வேண்டும் அதே வேளையில் ஐரோப்பா தனது சொந்த பாதுகாப்பிற்கு அதிக பொறுப்பேற்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார், டொனால்ட் ட்ரம்பின் இரண்டாம் முறையிலான ஆட்சியின்போது கிரீன்லாந்து விவகாரம் மற்றும் குடியேற்றம் தொடர்பான கருத்துக்களால் நிறுவிய பதற்றமான சூழலில் இந்த மாநாடு நடைபெற்றது.

62-ஆவது முனிச் பாதுகாப்பு மாநாடு ஜெர்மனி முனிச் நகரில் ஹோட்டல் பேயரிஷர் ஹோஃப்சில்,  பிப்ரவரி 13 முதல் 15, 2026 வரை நடைபெற்றது. இந்த மாநாட்டில் உலகம் முழுவதிலுமிருந்து60-க்கும் மேற்பட்ட அரசுத் தலைவர்கள், 50-க்கும் மேற்பட்ட சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் 115-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.ஜெர்மனி அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.சர்வதேச பாதுகாப்பு சவால்கள், உக்ரைன் போர், ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) போட்டி ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மாநாட்டில் பங்கேற்று, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் சீர்திருத்தங்கள் தேவை என்பதை வலியுறுத்தினார்.

 

Tags :

Share via
Logo