ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னிகொடிய நச்சுப் பொருளை பயன்படுத்தி கொல்லப்பட்டதாக ஐந்து ஐரோப்பிய நாடுகள் கூட்டு அறிக்கை

by Admin / 16-02-2026 12:30:00am
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னிகொடிய நச்சுப் பொருளை பயன்படுத்தி கொல்லப்பட்டதாக ஐந்து ஐரோப்பிய நாடுகள் கூட்டு அறிக்கை

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி தென் அமெரிக்காவைச் சேர்ந்த விஷ டார்ட் தவளைகளின் தோலில் காணப்படும் ஏபிபாடிடைன் என்ற கொடிய நச்சுப் பொருளை பயன்படுத்தி கொல்லப்பட்டதாக ஐந்து ஐரோப்பிய நாடுகள் (இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ,சுவீடன், நெதர்லாந்து)ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளன. நாவால்னி உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை ஐரோப்பிய ஆய்வகங்கள் ஆய்வு செய்ததில் இந்த நச்சு இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று அந்த நாடுகள் கூறுகின்றன. எபிபாடிடைன் இயற்கையாக ரஷ்யாவில் காணப்படாத ஒன்று என்பதால் சிறையில் இருந்த நவால்னிக்கி இந்த நஞ்சை கொடுக்க ரஷ்ய அரசுக்கு மட்டுமே வசதி நோக்கம் மற்றும் வாய்ப்பு இருந்ததாக அந்த நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன இந்த குற்றச்சாட்டுகளை ரசியா கடுமையாக மறுத்துள்ளது ரஷ்ய வெளிவரவு அமைச்சக ம் இது மேற்கத்திய நாடுகளின் வெற்றி பிரச்சாரம் என்றும் உள்நாட்டு பிரச்சனைகளிலிருந்து கவனத்தை திசை திருப்பவே இத்தகைய பொய்களை கூறுவதாகவும் தெரிவித்துள்ளது. ஆர்டிக் சிறையில் பிப்ரவரி 16 2024 அன்று நவாலினி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னிகொடிய நச்சுப் பொருளை பயன்படுத்தி கொல்லப்பட்டதாக ஐந்து ஐரோப்பிய நாடுகள் கூட்டு அறிக்கை
 
Tags :

Share via

More stories

Logo