இடி, மின்னலுடன் 24ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு.

by Editor / 21-03-2023 08:38:31am
இடி, மின்னலுடன் 24ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு.

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், 22 ,23ஆம் தேதிகளில் கடலோர தமிழக மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

 

Tags :

Share via

More stories