உலக நாட்டு அதிகாரிகள் கலந்துகொண்ட தொல்பொருள் கடத்தல் தடுப்பு பயிலரங்கம்.

by Editor / 10-09-2024 12:47:45am
உலக நாட்டு அதிகாரிகள் கலந்துகொண்ட தொல்பொருள் கடத்தல் தடுப்பு பயிலரங்கம்.

சென்னை வேளச்சேரியில் தொல்பொருள் கடத்தல் தடுப்பு குறித்த 5 நாள் பயிலரங்கம் இன்று தொடங்கியது. தொல்பொருள் கடத்தல் தடுப்பு முயற்சிகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியா, அமெரிக்கா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் இந்த பயிலரங்கத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் இந்திய தொல்லியல் துறை, அமெரிக்காவின் பாதுகாப்பு விசாரணைகள் பிரிவு, சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு பிரிவு மற்றும் நேபாள அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் சென்னை அமெரிக்கத் துணைத் தூதர் கிறிஸ் ஹாட்ஜஸ் பேசுகையில், “அமெரிக்கா மற்றும் இந்திய தொல்லியல் துறையின் ஒத்துழைப்புடன் 1,000க்கும் மேற்பட்ட கலைப்பொருட்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 300 பொருட்கள் ஏற்கனவே திருப்பி அளிக்கப்படும் நிலையில் உள்ளன” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை தலைமை இயக்குநர் யதுபீர் சிங் ராவத், “கடந்த காலங்களில் 30 கலைப்பொருட்கள் மட்டுமே மீட்கப்பட்டன. ஆனால் தற்போது பல நாடுகளில் இருந்து 345 கலைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இத்தகைய பிரச்னைகளை சட்டபூர்வமாக கையாள்வது அவசியம்” என்று தெரிவித்தார்.

 

Tags : உலக நாட்டு அதிகாரிகள் கலந்துகொண்ட தொல்பொருள் கடத்தல் தடுப்பு பயிலரங்கம்.

Share via