by Staff /
10-07-2023
03:52:03pm
<br />
சென்னை அயனாவரத்தில் காவலர் குடியிருப்பில் அருண்குமார் என்ற காவலர் தூக்கிட்டு உயிரை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எழும்பூர் காவலர் குதிரைப்படையில் அருண்குமார் காவலராக பணிபுரிந்து வந்த நிலையில், இன்று திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த வெள்ளிக்கிழமை கோவை சரக டிஐஜியாக இருந்த விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவம் அடங்குவதற்குள் அடுத்த போலீஸ்காரர் மரணம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையில் நடக்கும் இது போன்ற சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
Tags :
Share via