by Staff /
10-07-2023
04:19:30pm
சமீப காலமாக சின்ன சின்ன விஷயங்களுக்காக தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தேவையற்ற காரணங்களுக்காக சிலர் தற்கொலை முயற்சி செய்கின்றனர். சமீபத்தில், தெலுங்கானா மாநிலம் ஜகித்யாலா மாவட்டத்தில் இதுபோன்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கொருட்லா நகரை சேர்ந்த நரேஷ் என்பவரை அவரது மனைவி திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த நரேஷ், கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
Tags :
Share via