முயற்சி தான் அனைத்திற்கும் திறவுகோல் .
உங்களுடைய அடுத்து எடுத்து வைக்கும் பயணத்திற்கான அடியாக இருக்கும் ஒரு சின்ன தூக்கணாங்குருவி ...தன் கூட்டை எப்படி வடிவமைக்கிறது . ஒரு காகம் தனக்கான கூட்டை எப்படி உருவாக்குகிறது . யோசித்துப்பாருங்கள்.தூக்கணாங்குருவி மிக சிரத்தை எடுத்து தன் வாரிசுக்கான பிறப்பின் இடத்தை எவ்வளவு சொகுசாக அலகால் பின்னி பின்னி பாதுகாப்பு அரணாக கட்டுகிறது . காகத்தின் கூடு இல்லை..இல்லை..அது .கூடன்று . அங்கு மிங்குமாக பொறுக்கி எ டுத்து வந்த முட்கள்..உறுத்தும் குச்சிகள். எந்த தீர முயற் சி இன்றி அங்கொன்றும் இங்கொன்றுமாக வைத்த உறுதியற்ற உறைவிடம்...பெரும் கூட்டமாக இருக்கும் காக்கைக்கு புதிய உற்பத்தி சார்ந்த திறன் இல்லை .குறைந்த எண்ணிக்கை கொண்ட தூக்கணாங்குருவியின் செயல்.. .பாதுகாப்பான வாழ்கை போக்கு. இதுநமக்கும் பொருந்தும் நாம் ஊரில் ,பாதுகாப்பாக இருக்கையில் எதிலும் அக்கறையின்மை இருக்கும், பணம்,காசுபற்றி அக்கறை இருக்காது .நம் உழைப்பையும் துருப்பிக்க வைத்திருப்போம் . யாருமற்ற ஒரு ஊரில் ..ஒரு இடத்தில்.. சொந்த பந்தமற்ற ஊரிலிருந்தால் நம் உழைப்பு, திமை அனைத்தையும் காட்டி சம்பாதிக்க ..பாதுகாப்பா க வாழ முயல்வோம் .அப்பொழுது நமக்கு இவ்வள வு திறமையா என்று வியப்பு ஏற்படும் .அதனா ல் ,சோர்வை தூக்கி எறிந்து .பிடிக்கிறதோ இல்லை...எதையாவது ஒன்றை செய்து கொண்டிருங்கள் .அதற்கான அங்கீகாரம் நிச்சயம் ஒரு நாள் கிடைக்கும்.
Tags :