முன்னாள் சிறை கைதிகளுக்கு  நலத்திட்ட உதவிகள்: டிஜிபி சுனில்குமார் சிங் ஏற்பாடு

by Editor / 09-08-2021 04:37:03pm
முன்னாள் சிறை கைதிகளுக்கு  நலத்திட்ட உதவிகள்: டிஜிபி சுனில்குமார் சிங் ஏற்பாடு

 


தமிழகத்தில் 100 முன்னாள் கைதிகளின் நல்வாழ்வுக்காக அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் டிஜிபி சுனில்குமார் சிங் வழங்கப்பட்டுள்ளது என்று டிஜிபி சுனில்குமார் சிங் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறைகளில் இருக்கும் கைதிகளுக்கு பல்வேறு தொழிற்பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

சிறைச்சாலைகளிலேயே பல்வேறு கைவினைப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யவும் சிறைத்துறை ஏற்பாடுகள் செய்துள்ளது. இவ்வாறு வாழ்க்கையில் வழி தவறி பல்வேறு குற்றங்கள் செய்தவர்களை திருந்தி வாழ வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்த முயற்சிகளை சிறைத்துறையுடன் சேர்ந்து பல்வேறு தொண்டு நிறுவனங்களும் மேற்கொண்டு வருகின்றன.


அதன் தொடர்ச்சியாக தமிழக சிறைகளில் இருந்து தண்டனைகள் முடிந்து தொழிற்பயிற்சி முடித்து வெளியான முன்னாள் கைதிகளுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்கம் நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது.


அந்த அடிப்படையில் சிறையில் இருக்கும் போது தையல் பயிற்சி மேற்கொண்ட சிறைக் கைதிகளுக்கு தொழில் அமைத்துக் கொடுக்கும் வகையில், ஐந்து லட்ச ரூபாய் மதிப்பில் தையல் மிஷின்கள் 10 முன்னாள் கைதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த தையல் இயந்திரங்களை சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் சிங் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 6 மாதங்களாக சுமார் 38.40 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆட்டோ ரிக்சாக்கள், பசு மாடுகள் வெல்டிங் கருவிகள், கார்பென்டர் கருவிகள் உள்ளிட்ட பொருட்களை முன்னாள் கைதிகள் 90 பேருக்கு சிறைத்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via