பிரதமரை தனியே சந்திக்க நேரம் கேட்ட முதல்வர் ஸ்டாலின்

by Editor / 23-05-2025 05:06:03pm
பிரதமரை தனியே சந்திக்க நேரம் கேட்ட முதல்வர் ஸ்டாலின்

கடந்த 2015-ல் மத்திய திட்டக்குழு மாற்றப்பட்டு, நிதி ஆயோக் அமைப்பாக உருவாக்கப்பட்டது. நிதி ஆயோக் தலைவராக பிரதமர் மோடி உள்ளார். நிதி ஆயோக்கின் கூட்டம் ஆண்டுதோறும் நடைபெறும் நிலையில் சில ஆண்டுகளாக கூட்டத்தை புறக்கணித்த முதல்வர் ஸ்டாலின் நாளை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றுள்ளார். நிதி ஆயோக் கூட்டத்தின் இடைவேளையின் போது பிரதமரை தனியே சந்திக்க ஸ்டாலின் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via