வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லாரி உரிமையாளர் தீக்குளிப்பு.

by Editor / 20-05-2024 06:39:23pm
 வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லாரி உரிமையாளர் தீக்குளிப்பு.

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள பச்சைக்காடு பகுதியைச் சேர்ந்த சங்கர் குமார் தனக்கு சொந்தமாக தனது தாயார் ரத்னம் பெயரில் கனரக லாரி ஒன்று வாங்கி இயக்கிக் கொண்டிருந்தார். இந்த லாரி வங்கி கடன் மூலம் பெற்றதால் வங்கி கடன்களை செலுத்தி பின்னர் வாகனத்தின் மீது இருந்த அடமான கடனை நீக்கி வாகன உரிமத்தை புதுப்பித்து தருமாறு சங்ககிரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வழங்கி உள்ளார். இதன் பின்னர் தனக்கு சொந்தமான லாரியை ஈரோட்டை சேர்ந்த ஒரு தனி நபருக்கு லாரியை விற்பனை செய்து பாதி பணம் மட்டும் பெற்றுள்ளார். புதுப்பித்த வாகன உரிம அட்டையை சங்கர்குமாருக்கு அனுப்பி வைத்துள்ளனர். அஞ்சலக ஊழியரிடம் தபால் கவரை வாங்கி பார்த்த பொழுது சங்கர் குமாரின் லாரி உரிமை அட்டைக்கு  பதிலாக வடநாட்டை சேர்ந்த லாரியின் ஓட்டுனர் ஜெராக்ஸ் ஒன்றை அஞ்சலகம் மூலம் சங்கர் குமாருக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் அனுப்பி வைத்தது தெரிகிறது. இது குறித்து இன்று சங்ககிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சுப்பிரமணியை நேரில் சந்தித்து சங்கர் குமாரும் அவரது நண்பர் பாஸ்கரன் ஆகியோர் கேட்ட பொழுது நாங்கள் ஒரிஜினல் தான் அனுப்பி வைத்தோம் என்று தெரிவித்ததால் ஏமாற்றம் அடைந்த சங்கர்க்குமார் வட்டார போக்குவரத்து அலுவலக முன்பு தன் உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார் உடனடியாக  அருகில் இருந்தவர்கள் சங்கர் குமார் மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.  இது குறித்து தகவல் அறிந்த சங்ககிரி போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கு தீக்காயங்களுடன் இருந்த சங்கர் குமாரை மீட்டு உடனடியாக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். 

 

Tags :  வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லாரி உரிமையாளர் தீக்குளிப்பு.

Share via