தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு.. களைகட்டிய கிறிஸ்துமஸ் பண்டிகை...

by Admin / 25-12-2021 11:28:46am
 தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு.. களைகட்டிய கிறிஸ்துமஸ் பண்டிகை...

டிசம்பர் 25 ஆம் நாளான இன்று, ஏசு கிறிஸ்துவின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா கிறிஸ்தவ சமூக மக்களுக்கு முக்கிய திருவிழாவாக திகழ்கிறது. 

இதனை நாடு முழுவதும் உள்ள கிறிஸ்துவர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி தேவாலயங்களில் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. 

மாட்டுத் தொழுவத்தில் ஏசு கிறிஸ்து பிறந்ததை நினைவு கூறும் வகையில் ஆலயங்களில் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன.  

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள தேவாலயத்தில் நள்ளிரவு முதலே சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், ஏராளமான கிறிஸ்துவ மக்கள் கலந்து கொண்டனர். 

இதே போன்று, டெல்லியில் உள்ள கதிட்ரல் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளமான மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றனர்.
 
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள தேவாலயத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு சிறப்பித்தார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள செயிண்ட் பிரான்சிஸ் தேவாலயத்தில், ஏராளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட கிறிஸ்தவர்கள். 

தனி மனித இடைவெளியை கடைப்பிடித்து  சிறப்பு வழிபாடு செய்தனர். அங்கு வைக்கப்பட்டிருந்த குடில்கள் பார்வையாளர்களை கவர்ந்தன. இதேபோல், கோவா மாநில பானர்ஜியில் உள்ள தேவாலயத்தில், கிறிஸ்துவ மக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். அங்குள்ள தேவாலயத்தில் அவர்கள் ஒன்றிணைந்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.


 
 

 

Tags :

Share via