ஜூன் மாத 300 ரூபாய் சிறப்பு தரிசன  டிக்கெட் ஆன்லைனில் பெற ஏற்பாடு 

by Editor / 20-05-2021 04:41:44pm
ஜூன் மாத 300 ரூபாய் சிறப்பு தரிசன  டிக்கெட் ஆன்லைனில் பெற ஏற்பாடு 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 


திருப்பதி  ஏழுமலையான்கோயிலில் ஜூன் மாதம் 1 ம் தேதி முதல் 30 ம் தேதி வரையிலான  300 ரூபாய் சிறப்பு தரிசனத்துக்கான டிக்கெட்கள் (மே 21) வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 
மார்ச் மாதத்தில் நான் ஒன்றுக்கு 25 ஆயிரம் டிக்கெட் வழங்கப்பட்டு வந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை வைரஸ் பரவலில் காரணமாக  நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே வெளியிட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இந்த 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்களை http//tirupathibalaji.ap.gov.in என்ற தேவஸ்தான இணையத்தில்  முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல்  காரணமாக 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via