பெண் காவலரை முத்தமிட்ட எஸ்ஐ பணியிட மாற்றம்

by Editor / 13-06-2025 04:30:26pm
பெண் காவலரை முத்தமிட்ட எஸ்ஐ பணியிட மாற்றம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அருகே உள்ள காவல்நிலைய சார்பு ஆய்வாளர் கணேசன், முதல்நிலை பெண் காவலர் ஒருவரை தன் வீட்டுக்கு வரச்சொல்லிக் கட்டிப்பிடிக்க, அதிர்ச்சியில் உறைந்த அந்தப் பெண் காவலர் அவரைத் தள்ளிவிட்டுத் தப்பித்துள்ளார். இது நடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு, அந்தப் பெண் காவலர் இரவு நேரப் பணியில் இருந்தபோது, தனது அறைக்கு வரச்சொன்ன சார்பு ஆய்வாளர் கணேசன் அத்துமீறி முத்தம் கொடுத்துள்ளார். 

உடனே இந்த விவகாரத்தைத் தன் கணவரிடம் கூறிய அந்தப் பெண் காவலர், அவரை அழைத்துக்கொண்டு விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணனைச் சந்தித்து முறையிட்டுள்ளார். சார்பு ஆய்வாளர் கணேசன் உடனடியாக பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். ஆமத்தூர் காவல்நிலையத்தில் நடந்த இந்த வில்லங்க விவகாரம், ‘வேலியே பயிரை மேய்ந்தால் விளைநிலம் என்னாகும்? ’ என்னும் கேள்வியைக் கொஞ்சம் மாற்றி ‘வேலியே வேலியை மேய்ந்தால்? ’ எனக் கேட்க வைத்துள்ளது.


 

 

Tags :

Share via