விஜய்க்கு பெருகும் ஆதரவு? ஆசிரியர் சங்கத்தினர் திடீர் சந்திப்பு

சென்னை பனையூர் தவெக கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று (ஜூன் 13) விஜயுடன் ஆசிரியர் சங்கத்தினர் சந்திப்பு நடத்தியுள்ளனர். தமிழ்நாடு மேல்நிலை, உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் பழைய ஓய்வூதியம் உட்பட 9 அம்ச கோரிக்கையை முன்வைத்து போராடி வருகிறது. இந்நிலையில், தவெக தலைவர் விஜயுடன் இன்று ஆசிரியர் சங்கத்தினர் நேரில் சந்தித்தனர். இதில் அரசுக்கு தங்களின் கோரிக்கை குறித்து தவெக அழுத்தம் தர வேண்டும் என பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags :