கொரோனா சிகிச்சை அளிக்க மேலும்  2,000 மருத்துவர்கள் நியமனம்

by Editor / 16-06-2021 05:06:22pm
கொரோனா சிகிச்சை அளிக்க மேலும்  2,000 மருத்துவர்கள் நியமனம்



தமிழ்நாட்டில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, கூடுதலாக 2 ஆயிரம் மருத்துவர்களும், 6 ஆயிரம் செவிலியர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 
கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில், ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் தடையின்றி தடுப்பூசிகள் கிடைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
தமிழ்நாட்டிற்கு இதுவரை ஒரு கோடியே 16 லட்சத்து 57 ஆயிரத்து 690 தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றதாகவும் இதில், ஒரு கோடியே 6 லட்சத்து 60 ஆயிரத்து 464 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் கூடுதலாக பத்து கோடி தடுப்பூசிகள் கிடைத்தால் தமிழகத்தில் தகுதியான அனைவருக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டு விடும் எனக் கூறினார். மேலும் கூடுதலாக 2 ஆயிரம் மருத்துவர்களும், 6 ஆயிரம் செவிலியர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

Tags :

Share via