மும்பையில் பலத்த மழை- சாலைகளில் வெள்ளம்

மும்பையில் மீண்டும் கனமழை தொடங்கியுள்ளதால், நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெய்த பலத்தமழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.அதிலிருந்து மெல்ல மீண்டு வந்த நிலையில், மீண்டும் கனமழை பெய்தது. இதன்காரணமாக நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியதால், அவற்றை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனையடுத்து நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன.தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் கிழக்கு, மத்தியம் மற்றும் வடஇந்தியாவில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவத்துள்ளது
Tags :