மகா சிவராத்திரி மார்ச் -8
இந்து வழிபாட்டில் சிவராத்திரியும் வைகுந்த ஏகாதேசியும் மிகக் குறிப்பிட்ட இரவு வழிபாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த பொழுது.......
இவ்விரு நாட்களிலும் சிவனையும் பெருமாளையும் இரவு முழுவதும் கண்விழித்து பிரார்த்திப்பவர்களுக்கு உயிர் பயம் நீங்கி, அனைத்தும் நல்லதாக்கும் நற்பொழுதுகளாக மாற்றும் வரம் இறையருளால் கிடைக்கும் என்பது காலங்காலமாக நம்பப்பட்டு வருகின்ற வழிபாட்டின் வெளிப்பாடு
. சிவராத்திரியின் சிறப்பை சின்ன கதை வழி காலங்காலமாக சொல்லப்படுவதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்..
காட்டு வழியாக வந்து கொண்டிருந்த ஒருவனை புலி துரத்த... அவன் அருகே இருந்த வில்வ மரத்தில் விறு விறு என்று ஏறி, அதன் உச்சியில் அமர்ந்து கொண்டான். புலியோ இரைக்காக... அவன் இறங்கி வருகிற வரைக்கும் அங்கேயே படுத்து காத்து கிடந்தது .
அவன் வந்தால் ,அவனை அடித்து புசிக்க வேண்டும் என்பது புலியின் எண்ணம் .
மரத்தை விட்டு இறங்கினால் உயிர் போய்விடும் என்று பயந்து மரத்திலேயே இருந்து கொண்டிருந்தான், வழிப்போக்கன் .
ஆனால், புலி விலகிச் செல்வதாக இல்லை. .
மரத்தடியிலேயே படுத்து கிடந்தது.
.இரவு தொடர்ந்து கொண்டே இருக்கிறது..
கீழே இறங்குவதற்கும் வாய்ப்பு இல்லை. தூக்கம் வேறு அவனை நெருங்கிக் கொண்டிருந்தது .தூக்க கலக்கத்தில் விழுந்து விட்டால் புலிக்கு இரை ஆகி விடுவோம்..
பயந்து தூக்கத்தை கட்டுப்படுத்திக் கொண்டு ...
வில்வ மரத்தின் இலைகளை பறித்து.... பறித்து... பறித்து கீழே போட்டு கொண்டு விழித்தவாறை இருந்தான்
இரவும் சென்றது
. காலைபுலர்ந்தது:
புலியை காணவில்லை....
அவன் காட்டில் இருந்து இரவு நேரத்தில் புலி துரத்த ஓடி வந்து ஏறிய மரம் வில்வ மரம் .
அன்று சிவராத்திரி பொழுது....
இரவெல்லாம் தூங்காமல் விழித்துக் கொண்டிருந்து வில்வ இலையை பறித்து.... பறித்து வீசியது ,வேறுமெங்கும் அல்ல. மரத்தின் அடியில் இருக்கக்கூடிய அவனே தெரியாமல் இருக்கும் சிவலிங்கத்தின் மீது அவன் ஒவ்வொரு வில்வ இலையையும் பறித்து ....பறித்து பறித்து சிவலிங்கத்தின் மீதே போட்டு இருக்கின்றான்.
இதை தேவலோகத்தில் இருக்கும் சிவபெருமான் கவனித்து ........தெரியாமல் உயிர் காப்பதற்காக செய்த வேலையாக இருந்தாலும்.... அன்றைய பொழுதும் சிவராத்திரி என்பதால் ...சிவன் அவன் மேல் இறங்கி... அவன் உயிரை காப்பாற்றுவதற்கான வழிகளை செய்தார். இது காலம் காலமாக சொல்லப்பட்டு வருகின்ற ஒரு கதை
சிவராத்திரி பொழுதில் தெரிந்தோ ,தெரியாமலோ... எவர் ஒருவர் விழித்திருந்தாலே போதும்... அவருக்கு எல்லாவிதமான ஐஸ்வரியங்களும் கிடைக்கும் என்பதுதான் ஐதீகம் . அதனால் தான், சிவராத்திரி பொழுதில் முழு விரதம் இருந்து... இரவெல்லாம் சிவன் கோயில்களில் .,கண்விழித்து சிவனின் அருளை பெறுவதற்கான பக்த கோடிகளினுடைய இறைப்பணி தொடர்கிறது
இம் மகா சிவராத்திரி ஆண்டுதோறும் மாசி மாதத்தில் கிருஷ்ணபட்ச சதுர்த்தி திதியில் கொண்டாடப்படுகிறது.
Tags :