தீபாவளி பண்டிகையை யுனெஸ்கோ இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தின் பட்டியலில் சேர்த்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி

by Admin / 11-12-2025 12:17:58am
தீபாவளி பண்டிகையை யுனெஸ்கோ இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தின் பட்டியலில் சேர்த்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி

தீபாவளி பண்டிகையை யுனெஸ்கோ இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தின் பட்டியலில் சேர்த்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்ததோடு இது இந்திய மக்களுக்கு கிடைத்த பெருமை என பாராட்டியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் , இந்தியாவிலும் உலகங்களும் உள்ள மக்கள் இந்த அறிவிப்பால் மகிழ்ச்சி அடைந்துள்ள என குறிப்பிட்டுள்ளதோடு தீபாவளி பண்டிகை இந்திய கலாச்சாரம் மற்றும் மேலும் எங்களுடன் ஆழமான தொடர்புடையது என்றும் அது நமது நாகரிகத்தின் ஆன்மா என்றும் அவர் விவரித்ததோடு இது வெளிச்சத்தையும் நீதியையும் பறைசாற்றுகிறது என்று கூறிய பிரதமர் யுனெஸ்கோவின் இந்த அங்கீகாரம் தீபாவளி உலகளாவிய புகழை மேலும் அங்கீகரிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து இந்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஜெகாவத் இந்த கௌரவம் இதுவரை தீபம் ஏற்றிய ஒவ்வொரு வீட்டிற்கும் சொந்தமானது என்று குறிப்பிட்டுள்ளார். தீபாவளி தீப ஒளியின் திருவிழா என்று யுனோஸ்கோபால் வர்ணிக்கப்பட்டுள்ளது இது இருளின் மீது ஒளியின் வெற்றியையும் தீமையின் மீது நன்மையின் வெற்றியும் குறிக்கிறது என்றும் டிசம்பர் 10 2025 அன்று இந்த அங்கீகாரத்தை புது டிவியில் யுனெஸ்கோ அறிவித்தது. இந்திய பாரம்பரிய பட்டியலில் தீபாவளி பதினாறாவதாக சேர்க்கப்பட்டுள்ளது

தீபாவளி பண்டிகையை யுனெஸ்கோ இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தின் பட்டியலில் சேர்த்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி
 
Tags :

Share via