,கே.ஏ. செங்கோட்டையன் நீக்கப்பட்டிருப்பது அதிமுகவின் அடுத்த கட்ட நகா்வை பாதிக்குமா...
அதிமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட முக்கிய தலைவர் கே.ஏ. செங்கோட்டையன் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி, ஏற்கனவே நீக்கப்பட்ட தலைவர்களுடன் (ஓ. பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன்) பேச்சுவார்த்தை நடத்தியதால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். சமீபத்தில் முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான கே.ஏ. செங்கோட்டையன் அதிமுகவின் ஒற்றுமைக்காக நீக்கப்பட்ட தலைவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியதற்காக, அக்டோபர் 31, 2025 அன்று கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார்..சி.டி.ஆர். நிர்மல் குமார் அதிமுகவில் இருந்து விலகி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியில் இணைந்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, சசிகலா பொதுச் செயலாளராகவும், டிடிவி தினகரன் துணைப் பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டனர். பின்னர், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியால் 2017 ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் இவர்கள் நீக்கப்பட்டனர்..ஓ. பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமிக்கும் இவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பி.எஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டார்.
வைத்திலிங்கம், கு.ப. கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக இருந்ததால், இவர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.முன்னாள் அமைச்சா் அன்வா்ராஜா தி.மு.க.வில் இணைந்தாா். இந்நிலையில்,கே.ஏ. செங்கோட்டையன் நீக்கப்பட்டிருப்பது அதிமுக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சி வலிமையாக இருந்தாலும் இன்றைய நிலையில் அதிமுகவில் வெகுஜன மக்களை கவர்ந்திழுக்க கூடிய எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்கள் இல்லாமல் இருக்கின்ற வெற்றிடத்தை... இன்றைக்கு இருக்கிற தலைவர்களால் நிரப்ப முடியுமா.. இரண்டாம் கட்ட தலைவர்களாக இருக்கிறவர்கள் அவரவர் மாவட்டங்களில் செல்வாக்கு மிக்கவர்களாக இருப்பதால் அவர்களைப் போன்ற தலைவர்களை நீக்குவது தேர்தல் நேரத்தில் கட்சியை பலகீனப்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.. அனைவரையும் ஒருங்கிணைத்து இருக்கின்ற பலத்தோடு மேலும் பலத்தை கூட்ட வேண்டியது ஒவ்வொரு கட்சியும் தங்களுடைய இருப்பை நிலை நிறுத்திக் கொள்வதற்கான வழியாகும். போட்டிகள் அதிகரிக்கையில் களத்தில் கவனமாக செயல்பட வேண்டியது அவசியம்.. இது ஒவ்வொரு கட்சிக்கும் இருக்க வேண்டிய பாலபாடம். திமுக அந்த வகையில் தங்கள் கட்சியில் இருப்பவர்கள், பொதுமக்கள் வெறுப்பிற்கு உள்ளாக்கப்பட்டவர்களைத் தவிர ,மற்றவர்களை விலக்குவது என்பது அவர்கள் விதியில் இல்லை.. எல்லோரையும் அரவணைத்தும் அவரவருக்குரிய மரியாதையை கொடுத்தும் நடத்திச் செல்வது கவனிக்கத்தக்க விஷயம் ஆகும்.. வளராத கட்சிகள், வளர்ந்த கட்சிகளிலிருந்து இரண்டாம் கட்ட தலைவர்களை ஈர்த்து தங்கள் பலத்தை உறுதிப்படுத்திக் கொள்ளக் கூடிய செயலுக்கு வளர்ந்த கட்சிகள் காரணமாகி விடுகின்றன..
Tags :
















.jpg)


