மோப்பநாய் மறைவு 24-குண்டுகள் முழங்க இறுதி மரியாதை

மதுரை மத்திய சிறை துறையில் டிஎஸ்பி ரேங்கிங் இருந்த அர்ஜுன் என்ற 13 வயது வெடிகுண்டு தடுப்பு பிரிவு மோப்ப நாய், உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது. இதனையடுத்து அரசு மரியாதையுடன் 24 குண்டுகள் முழங்க காவல்துறையினர் மரியாதை செய்து இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன. இதில் சிறைத்துறை எஸ். பி வசந்த கண்ணன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் மோப்ப நாய்க்கு அஞ்சலி செலுத்தினர்.
Tags :