ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் விஷம் குடித்து தற்கொலை

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், நீ குப்பை அருகே உள்ள என். புதூர் கிராமத்தில், சின்னத்துரை(55), கலா(45), தம்பதியினரும், இவர்களது மகன் சிவா(26), என்பவரும். ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள வயல் பகுதியில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
இது குறித்த தகவலின் பேரில் வி.களத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிவா திருமணம் செய்து கொண்ட பெண் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரிந்து சென்ற நிலையில், மன உளைச்சல் காரணமாகவும் கடன் தொந்தரவு காரணமாகவும் மனமுடைந்து மூவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்திருக்கிறது.
Tags : குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் விஷம் குடித்து தற்கொலை