கோர விபத்தில் 15 பேர் படுகாயம்

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் கேபிள் அறுந்து கோபுர தொட்டில் ராட்டினம் திடீரென கீழே விழுந்தது. இந்த சம்பவத்தில் 11 பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஈச்சம்பவம் சிவில் லைன் காவல் நிலையத்திற்கு உட்பட்ட குந்தன் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த விபத்தில் அனைவரும் உயிர் தப்பியதாக அஜ்மீர் ஈஎஸ்பி சுஷில் குமார் தெரிவித்தார். விபத்தின் போது 25 பேர் ராட்டினத்தில் அமர்ந்திருந்தனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.
Tags :