மயில்களை விஷம் வைத்து கொன்ற விவசாயி கைது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே செம்மடைப்பட்டி, பொட்டிநாயக்கன்பட்டி அருகே உள்ள ஓடை பகுதியில் 17 மயில்கள் விஷம் கலந்த உணவை தின்ற நிலையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து கன்னிவாடி வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் நடுப்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயி முருகன் உணவில் விஷம் கலந்து வைத்து மயில்களை கொன்றது தெரிய வந்ததையடுத்து முருகனை வனத்துறையினர் கைது செய்தனர்.
Tags : மயில்களை விஷம் வைத்து கொன்ற விவசாயி கைது