பின்னணி பாடகி வாணி ஜெயராம் இல்லத்தில் அவரது உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் அஞ்சலி
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 19 மொழிகளில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட
பாடல்களை பாடியவர் வாணி ஜெயராம். இவர் சிறந்த பின்னணி பாடகிக்காக 3 முறை தேசிய விருதையும் பெற்றுள்ளார். சமீபத்தில் கூட மத்திய அரசு அவருக்கு பத்மபூஷன் விருது அறிவித்திருந்தது. பிரபல பின்னணி பாடாகியாக வலம் வந்த வாணி ஜெயராம் இன்று உயிரிழந்தார்.
இவரது மறைவிற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, டிடிவி. தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். மேலும், திரையுலகினர், பாடல் ஆசிரியர்கள், இசையமைப்பாளர்கள், கவிஞர்கள் என பலரும் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலி செலுத்தினர்.இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரடியாக அவரது இல்லத்திற்கு வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் அங்கு இருந்த நடிகர் ஒய்.ஜி மகேந்திரனிடம் இந்த சம்பவம் எவ்வாறு நடைபெற்றது என்பதை குறித்து ஆளுநர் ஆர்.என். ரவி கேட்டறிந்தார். பின்னர் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
Tags :