.ஸ்டாலின் எனது சகோதரர்.அவரை மரியாதை நிமித்தமாகச்சந்தித்துள்ளேன்.-மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

by Admin / 02-11-2022 06:27:46pm
.ஸ்டாலின் எனது சகோதரர்.அவரை மரியாதை நிமித்தமாகச்சந்தித்துள்ளேன்.-மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி


மணீப்பூர் மாநில ஆளுனர் இல.கணேசன் இல்லத்திருமண விழா நாளை நடைபெறுகிறது இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மம்தா பானர்ஜி சென்னைவந்ததும்  தமிழக முதலமைச்சரின் ஆழ்வார் பேட்டை இல்லத்திற்கு வருகைபுரிந்தார்.அவரை முதலமைச்சர் மு.க ஸ்டாலின்,உதயநிதி ஸ்டாலின் வரவேற்றனர். 2024 ல்பாராளுமன்றத்தேர்தல் வரவுள்ள சூழலில்  இச்சந்திப்பு முக்கியத்துவம்  வாய்ந்ததாக  கருதப்படுகிறது இந்நிலையில்
முதலமைச்சர்  இல்லத்தில் இருமுதல்வர்களும் கூட்டாகச்செய்தியாளர்களைச்சந்தித்தனர் .மம்தாபானர்ஜி,மணீப்பூர்ஆளுனரின் குடும்ப விழாவிற்கு சென்னை வந்துள்ளேன்.ஸ்டாலின் எனது சகோதரர்.அவரை மரியாதை நிமித்தமாகச்சந்தித்துள்ளேன்.இது கலாச்சார,பண்பாட்டுச்சந்திப்பு என்றார்.சந்திப்பின் பொழுது கனிமொழி எம்.பி,டி.ஆர்.பாலு.எம்.பி.உடனிருந்தனர்

 

Tags :

Share via