மதுரையில் கஞ்சா வழக்கில் 15-பேரின் சொத்துக்களை போலீசார் பறிமுதல்

மதுரை நகரில் எஸ். எஸ். காலனி, கரிமேடு, கீரைத்துறை ஸ்டேஷன்களுக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்றதாக சுபாஷ்சந்திரபோஸ், மீனாட்சிசுந்தரம், சக்திவேல் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான விசாரணை மதுரை போதை பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. விசாரித்த நீதிபதி ஹரிகுமார், 15 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சமீபத்தில் உத்தரவிட்டார். இதைதொடர்ந்து கஞ்சா விற்பனை மூலம் அவர்கள் வாங்கிய ரூ. ஒரு கோடி மதிப்புள்ள வீடுகள் உள்ளிட்ட சொத்துக்களை தமிழகத்தில் முதன்முறையாக போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், துணைகமிஷனர் சீனிவாச பெருமாள் பறிமுதல் செய்து அரசிடம் ஒப்படைத்தனர். இவை ஏலம் விடப்பட்டு அதன் வருவாய் அரசின் கணக்கில் சேர்க்கப்பட உள்ளது.
Tags :