ரீல்ஸ் எடுத்ததை தட்டிக்கேட்ட மீனவருக்கு வெட்டு.. 3 பேர் கைது

சென்னை திருவொற்றியூர் சூரை மீன்பிடித் துறைமுகத்தில், 3 பேர் கத்தியுடன் ரீல்ஸ் எடுத்துள்ளனர். அவர்களிடம் சென்ற மீனவர் சேத்தப்பன், “எதற்காக இங்கு வந்து வீடியோ எடுக்கிறீர்கள்?” என்று கேள்வி கேட்டுள்ளார். இதனால், அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், மீனவரை அரிவாளால் வெட்டியுள்ளனர். இந்த குற்றச் செயலில் ஈடுபட்ட பர்மா வசந்த் (33), பிரதீப் (20), லத்தீஷ் 20) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். காயமடைந்த சேத்தப்பன், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
Tags :