இளம்பெண் தற்கொலை.. கணவர், மாமனார், மாமியார் கைது

திருப்பூரைச் சேர்ந்த பிரீத்தி என்பவருக்கும், சதீஷ்வருக்கு கடந்த 2024 செப். மாதம் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது பிரீத்திக்கு 120 பவுன் நகை, சொகுசு கார், ரூ.25 லட்சம் வரதட்சணையாக பெற்றோர் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மேலும், ரூ.50 லட்சம் வாங்கிவருமாறு கணவரின் குடும்பத்தினர் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால், இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட நிலையில், பிரீத்தியின் கணவர் சத்தீஸ்வர், மாமனார் விஜயகுமார், மாமியார் உமா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
Tags :